அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர்கோயில்


தொலைபேசி: 0452 - 2470228

தீர்த்த தலம்

இந்த நீருற்றில் உள்ள தண்ணீர் ஆனது சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படிகிறது.இக்குளத்தில் குளிப்பதன் மூலம் மனிதர்களின் ஆசைகள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது.அதனால் இக்குளத்திற்கு இஷ்ட சித்தி என ஒரு பெயர் உள்ளது, மேலும் ச்ரவனம், பவ தரணி மற்றும் இஷ்ர சித்தி என மூன்று நீரூற்றுகள் இந்த புனித நீரில் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

இந்த நீரில் உயர்தர தாதுக்கள் நிறைந்துள்ளது.இதில் இரும்பு மற்றும் செம்பு போன்ற கனிமங்கள் உள்ளன.இந்த நீரானது பல நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.இந்த நீரானது இனிப்பு சுவை கொண்டது.

இங்கே இறைவன் ஹனுமனுக்கு(ராம பக்தர்)ஹனுமான் தீர்த்தம் உள்ளது.இதன் பெயர் “கருட தீர்த்தம்” என்றழைக்கபபடுகிறது.கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள உத்தர நாராயனவினி நீர் மற்ற சிலைகள் நீராடுவதற்கு பயன்படுகிறது.